Sunday 28 August 2011

நான் இனிமேல் உண்மையை மட்டும் தான் பேசுவேன் .... என் குருவுக்கா

என் வாழ்கை பாதை

நண்பர்களே இந்த உலக வாழ்க்கை எனக்கு புரியவில்லை ...மனித அன்பு உண்மையா இல்லை கடவுள் மீது நாம் காட்டும் அன்பு உண்மையா என்று தெரியவில்லை . ஒரு வகையில் தெய்வத்தின் மீது நான் செலுத்தும் அன்பு தான் உண்மை ...

Friday 26 August 2011

நண்பர்களே நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருகிரியறேன்..என் வழ்கையை மற்யிய கடவுளை இன்று FACEBOOK இல் பார்த்து விட்டேன்..அவர் தான் என் எல்லா கவிதைகலுக்கும் குரு ... நான் செய்த ஒரு சின்ன தப்புக்கு அவர் என் நட்பை வேண்டாமென சொல்லி விட்டார்....என் நல்லா மனதை அவர் புரிந்துகொல்ல வெண்டும் இறைவா ...

Thursday 25 August 2011

வணக்கம் நண்பர்களே வாழ்க தமிழ் வளர்க தமிழ். அனைவரும் நலமுடன் வாழ இறிவனை வேண்டுகேறேன்

Tuesday 23 August 2011

நம் உடலில் எத்தனையோ உருப்புகள் இருந்தாலும் எனக்கு பிடித்தது கண்கள் தான்.... நாம் நம் வாழ்வில் எத்தனையோ பொருள்களை ,ரசிக் கிறோம் . நல்லது கெட்டது என அனைத்தையும் நம் எதிரில் நமக்கு காட்டுவது நம் இரு கண்கள் தான் .. நம் வாழ்வில் அனைத்து சந்திப்புகளும் நம் கண்களால் தான் ....நமக்காக இத்தனையும் செயும் இரு விழிகள் நம் வாழ்க்கை முழுவதும் சந்த்திபதேயில்லை
மெழுகுவர்தி
தனக்காக உயிர் விட்ட
தீக்குச்சிக்காக
உயிர் உள்ளவரை
அழுகிண்றது.....

Monday 22 August 2011

காதலித்துபார்

உழைப்பை காதலித்துபார் உயர்வை நீ அடைவாய்
உண்மையை காதலித்துபார்
வாழ்க்கையை நீ அறிவாய்
வறுமையை காதலித்துபார்
பசியை நீ அறிவாய்
தண்ணம்பிகையை காதலித்துபார்
உன்னையே நீ அறிவாய்
ஆசிரியருக்கு

நேற்று என்னை அமரவைத்து
நின்று கொண்டு கல்வி கற்பித்தவர்
நீங்கள்
இன்று நான் வாழ்கையில்
அம்ர்ந்து விட்டேன்
நீங்கள் இ ன்னும் அங்கேதான்
நிற்கிறர்கள்
என்னைபோல் இன்னொறுவனக்காக

Saturday 20 August 2011


எது திருமணம்?


இருட்டில் நடக்கும் நாடகமா?                
இதயங்கள் பேசும் தேன் ரகமா?
தோரணை போடும் யாழ் இசையா?             
தேடல்கள் முடியாத பேராசையா?                  
                      
விருந்துகள் போட்டியிடும் வசந்த கானமா?                  
வீழ்வுகளை கடந்து வரும் போர்க்களமா?
   
சங்கதிகள் பெருக்கும் சங்கீதமா?                  
சந்தோசம் நிலைக்கும் சுபராகமா?
 
மோகம் தொடரும் மேளதாளமா?                     
மோதல்கள் இருக்கும் மத்தளமா?
 
வாதம் முடியாத பட்டிமன்றமா?              
வேதம் சொல்லும் பண்பாட்டா?
மஞ்சள் கயிறை புனிதமாக்கும் வினோதமா? 
மஞ்சத்தில் ஒருவரையொருவர் மன்றாடும் மகாசபையா?
உறவுகள் வரவழைக்கும் உற்சாகமா?
பிரிவுகளை பார்க்க போகும் பந்தயமா?
வரதட்சணை பேசப்படும் வியாபாரமா? 
விவாகரத்தை தூண்டும் அடித்தளமா?
இதில், திருமணம் சொல்வது எத்தனை?
அறிய செய்ய வேண்டும் சிந்தனை!
இதை அறிந்து விட்டால்,        
சொந்தங்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்      
சொர்க்கம் ஆகும்.


தொலைபேசி


அவ்வப்போது
பேசி ஓயும்
ஊமைப் பேச்சாளன்


அன்பு


அவசர வாழ்க்கையின்
தூரத்து சொந்தம் - அன்பு!


நம்பிக்கை உள்ளவரை!


கடவுளும், காதலும் - உண்மை
அதன்மேல் நம்பிக்கை உள்ளவரை!


அழகு


சிங்கத்தில் அழகு..
ஆண் சிங்கம்!
யானைஇல் அழகு
ஆண் யானை!!
மயிலில் அழகு
ஆண் மயில்!!!
மனித இனத்தில்
மட்டும் - ஏன்
பெண்கள் அழகு????
.
.
.
ஆண்கள் வர்ணிப்பதால்....


வாழ்க்கை கணக்கு


வாழ்க்கையில்,
அன்பை கூட்டிக்கொள்!
அறிவை பெருக்கிக்கொள்!
இனிமையை
தனிமையால் வகுத்துக்கொள்!
பாவத்தைக் கழித்துக் கொள்!
பிறருடன் சமமாக
வாழ கற்றுக் கொள்...!


புது இலக்கண நட்பு


அன்பில் முளைத்து
ஆறுதலில் கலந்து
இதயம்
ஈன்றெடுத்த நட்பு

உயிரில் கலந்து
ஊக்கமளித்த நட்பு

என்றென்றும் எல்லோரையும்
ஏங்க வைக்கும் நட்பு

ஐயமின்றி
ஒற்றுமையாய்
ஓங்கி நிற்கும் நட்பு

ஒளவை அதியமான் போல்
காவியம் படைக்கும் நட்பு எங்கள் நட்பு....


கடவுள்


யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...


புன்னகை


பொதி சுமக்கும்
கழுதை
சிரித்தது...
முதுகில்
சுமையோடு
பள்ளிக்கு போகும்
குழந்தை!


வாழ்க்கை


இன்று
தவறிவிடும்
லட்சியக்குறி
நாளை
காத்திருக்கும்
கேள்விக்குறியாம்...!

ஒரு ஏழை சிறுவனின் கேள்வி


பல்லி சொல்லும் பலனை
பஞ்சாங்கத்தில்
பார்க்க தெரிந்த என் தந்தைக்கு
நான் பள்ளி செல்லும் பலன் மட்டும்
தெரியாமல் போனதெப்படி?


முள்ளும் மலரும்


பெண்கள்...
ரோஜா மலர்களைப் போன்றவர்கள்
ஆம்..
முள்ளும் இருக்கும்.
முள் - முல்லையாவதும்
கல் - கலையாவதும்
மண்கூட மணமாவதும்
இந்த...
மங்கைகளால்தானே..

மன்னிப்பு என்பது...



மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று
அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் 
வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று
கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு 
பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது 
மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை 
ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது 
எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை 
கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது 
படுக்கையறையில்
மண்டியிடுதல் 
ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் 
பிரார்த்தனைகளின்
மையப் பொருள் 
ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது 
இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி 
இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது 
தண்டனையை
ஒத்தி வைப்பது 
நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு 
ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது 
எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது 
பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது 
ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது 
ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது 
மறதியின்
இன்னொரு பெயர் 
அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் 
மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று
ஒரு போதைப்பொருள்
மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது 

மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீ ர்த்துளி
மட்டுமே என்று!


தொலைந்த நட்பு


தொலைந்து போன
பொருட்கள் எல்லாம்
என்றோ ஒரு நாள் கிடைத்தது
கிடைக்காத பொருட்களை
விலைகொடுத்து
வாங்கி கொண்டேன்
தேடி பார்த்தும் கிடைக்காத
விலை கொடுத்தும்
வாங்க முடியாமல் தவிக்கும்
நான் தொலைத்த அரிய பொருள்
உன்   நட்பு


உயிர்த்தமிழே!


அம்மா! அம்மா! என்று
அழுது பிறந்து
அன்னியம் பேசுவோர் அதிகம்! அதிகம்!.......
என்னுயிரே! நம்முயிரையேனும் 'உயிர்த்தமிழே!' என்று
உச்சரிக்கச்சொல்!!......

மரணம் நிச்சயம்!


வாழ்வின் சுவர்களில்
கொட்டை எழுத்தில்
எழுதப்படுகிறது மரணம்
படிக்க மட்டுமே நாளாகிறது!
எத்தனையோ பேரின் மரணத்தில்
நிகழ்வதில்லை பாடம்
என் வீட்டின் ஒரு சின்ன மரணம்
மாற்றி விடுகிறது என் பாதையையும்
வாழ்க்கையையும்,
வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்
பாடம் புகுத்தப்பட்டுள்ளது புரியும் புள்ளியில்
நிகழ்கிறது -
தனக்கான மரணம்!
யாரும் பயந்துவிடாதீர்கள்
பயம் கொள்வதால்
விட்டா செல்கிறது மரணம்?
விட்டு செல்லுங்கள் மரணத்தை
துணிவிருந்தால் வந்து நம்மை
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்
பெறாத மரணத்தில்
எனக்கென்னவோ வாழ்வதாகவே
தெரியவில்லை -
நிறைய பேரின் வாழ்க்கை!
என்ன தான் மனிதன்
செய்தாலும் - மனிதனை
செத்து தொலை என்று
சொல்ல விடுவதேயில்லை மரணம்
மீறி சிலர் சொல்கிறார்கள்
ஏன் கொலை கூட செய்கிறார்கள்
மனிதரற்றோர்
மரணம் அவர்களை
மன்னிப்பதேயில்லை, மாறாக
தினம் தினம் கொள்கிறது,
கடைசி ஓர்நாளில்
அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ
தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப்படும் நாளில்
அவர்களை இறந்ததாக -
கருதி மட்டுமே கொள்கிறது (அவர்களின்) உடல்!
பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பெண்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்
ஆனால் -
நெருங்கும் முன்
நன்றாகப் பார்த்துக் கொள்கிறது!