Saturday 20 August 2011


நடுரோட்டு வாழ்க்கை!


உணவும் உடையும் நடுரோட்டில்...
உறக்கமும் விழிப்பும் நடுரோட்டில்..
அழுகையும் சிரிப்பும் நடுரோட்டில்..
அணைப்பதும் அடிப்பதும் நடுரோட்டில்..
ஆசை குழந்தையும் நடுரோட்டில்..
அறுபது முதிர்ந்ததும் நடுரோட்டில்..
நட்பும் பகையும் நடுரோட்டில்..
நாயும் நாங்களும் நடுரோட்டில்..
நிலை தடுமாறிய வண்டி ஏறிவிட்டால்..
எங்களுக்கும் இடம் கிடைக்கும் இடுகாட்டில்!

No comments:

Post a Comment