Saturday 20 August 2011


திருந்தாத மனிதன்


காட்டை அளித்து வீட்டை கட்டியவன்
காரும் சோறும் கடையில் தின்றவன்
மூட்டை கட்டி முதலீடு செய்தவன்
நாட்டை காக்க மறந்துவிட்டான்......
சொகுசும் பவுசும் போதுமென்று
சொக்காய் போட்டு திரிந்தவன்
பரம்பரை வழக்கத்தை மாற்றவே
பவுடர் பூசி வாழ்கிறான்....
கோடி கோடி சேர்க்கவே
குற்றம் நிறைய செய்கிறான்
கணினி யுகம் மாறியும்
கடமை மறந்து வாழ்கிறான்
சுமைகள் கோடி இருந்துமே
சுகமாய் வாழ தெரியாமல்
பகைமை கொண்ட நோக்கிலே
பார் உலகை மறந்துமே
வேறுலகில் சென்றுமே
வேண்டிய வசதி பெற்றுமே
நாசம் கொண்ட ஆசையால்
நாடும் வீடும் மறந்துமே
நன்மையெல்லா தொலைத்துமே
பாதி உயிர் போகவே மீதி உயிர்
மண்ணிலே சேரும்போது சொர்க்கமே...
இனியாவது திருந்திட இமயம் வென்று காட்டடா!



No comments:

Post a Comment