Saturday 20 August 2011

மனித வாழ்க்கை


இயந்திரமயமான வாழ்க்கை 

காலையில் எழுந்ததும் 
பல் துலக்கி 
குளித்து முடித்து 
ஆகாரம் உண்டு 
ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து 
அலுவலகம் சேரும் முன் 
கடிகாரம் பகல் 11-ஐ தொட்டுவிடும் 

கணிப்பொறியை திறந்து 
அன்றைய செய்திதாள்களை அலசிவிட்டு 
மினஞ்சல்களுக்கு பதில் அனுப்பி முடித்து 
பார்த்தால் 
கடிகாரம் பகல் 1 என பல் இளிக்கும் 

மீண்டும் ஆகார மூட்டையோடு 
சென்று திரும்பினால் 
அரை நாள் ஓடியிருக்கும் 

மீண்டும் கணிப்பொறியை திறந்து 
அன்றைய பணிகளை செய்து 
அனுப்பவேண்டிய மினஞ்சல்களை அனுப்பி முடித்து 
திரும்பி பார்கையில் 
சில/பல SMS / Missed calls என் கைபேசியில் தொற்றி கொண்டிருக்கும் 
அப்போதுதான் நினைவிற்கு வரும் 
மனைவி வாங்கி வர சொன்ன பொருட்கள் 
ஆனால் அதற்குள் 
கடிகாரம் இரவு 8-ஐ தொட்டுவிடும் 

மீண்டும் ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து 
வீட்டை அடைந்து 
டிவி-ல் முகம் புதைத்து 
இரவு ஆகாரம் முடித்து 
வாழக்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளமலே... 
வாழக்கையை ரசித்து வாழ்வது எப்படி 
என்று அறிந்துகொள்ளமேலே... 
உறங்கி போகிறோம்...




விடை தெரியுமா உங்களுக்கு  

எப்பொழுது தான் 
இந்த சமுத்திரங்கள் 
நிரம்பும் 
எத்தனை ஆறுகள் 
தண்ணீர் தந்தும் 
நிரம்ப மறுப்பது ஏன்? 
மனிதனை போல் 
அதற்கும் ஆசையா? 

வானத்திற்கு நீலம் போட்டு 
காய வைத்தது எப்படி 

பூக்கள் மட்டும் வித விதமாய் 
ஆடை உடுத்துவது எப்படி 
எந்த கடையில் போய் 
எடுக்கிறது 

தண்ணீருக்கும் 
காற்றுக்கும் 
வண்ணம் எப்படி போனது 

அதுவரை கசந்த காய் 
பழமானதும் 
எங்கு போய் வாங்கி 
கொண்டு வந்து 
இனிப்பை தன்னுள் போட்டு கொள்கிறது 

ஆலமரத்தில் மட்டும் வரும் 
விழுது 
மற்ற மரங்களுக்கு 
எதற்கு வரவில்லை 

சூரியன் எதற்கு 
கிழக்கு போய் 
உதிக்கிறது 
மேற்கு உதிக்க வேண்டியது தானே 

எதற்கு சந்திரன் மட்டும் 
தேய்ந்து போய் விட்டு 
முழு நிலவு ஆவது எப்படி 
யார் அதை தேய்த்து விடுகிறார்கள் 
யார் அதற்க்கு 
ஹோர்லிக்ஸ் எல்லாம் 
போட்டு கொடுத்து 
தேற்றி விடுகிறார்கள் 

எப்படி நட்சத்திரம் 
மட்டும் 
ஒளிர்கிறது 
தூரத்தில் 
பக்கத்தில் ஒளிர்ந்தால் என்ன 
கோழி வந்ததா 
முட்டை வந்ததா முதலில் 
இதல்லாம் என் கேள்வி இல்லை 
கோழியும் சேவலும் 
வந்தது எப்படி 

எத்தனை கேள்விகள் எனக்கு 
விடை தெரியாமல் 
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் 

  

தோழி தந்த பரிசு " தனிமை"  

எப்பொழுதும் என்னிடம் எதையும் 
மறைக்காத என் தோழி..! 
இப்பொழுது என்னிடம் பேசுவதற்கு 
நேரமில்லை அவளுக்கு..! 
நெருங்கி பேசி பதில் இல்லாமல் 
மௌனமாகின்றன என் வார்த்தைகள்..! 
காற்றிடம் பகர்கிறேன் என் வேதனையை.. 
வெக்கை காற்றகிறது என்னை சுற்றி..! 
தனிமையில் நடந்து 
சருகுகளுடன் 
பயணிக்கிறேன்..! 
மரங்களின் சலசலப்புடன் 
உரையாடுகிறேன்..! 
இயற்க்கை உடன் 
இயந்து, 
தனிமையிலும் இனிமை 
கண்டு..! 
நண்பர்களையும் இனம் 
கண்டு..! 
அன்பாகிறேன்..! 
அன்பு செய்கிறேன்..! 
என் மேல் மட்டும் 
அன்பு செய்ய யாரும் இல்லை...! 

  

மானுடம் கடந்த பேரின்பமே....! 

ஓர் துளியில் 
உயிர் கொண்டு 
உருவான தேகமதைச் 
சிற்றின்பம் சிறைப்பிடித்து 
பாபங்கள் தாபங்கள் 
நித்தம் நித்தம் 
புடைசூழ 
உணர்ச்சிக் குப்பலாய் 
வாய்த்த இவ்வாழ்வில் 
யாதொன்றும் அறியாமல் 
தீதென்றும் தெரியாமல் 
காரிருள் காட்டும் வழி 
காலங்கள் கரைந்தோட 
உயிர்க்கூட்டை 
உடைத்தெறிந்து 
ஆவியாய் ஆனபின் 
பிரபஞ்ச இருளின் 
ஞான ஒளியாய் 
ஆதி அந்தமாய் 
மரண சௌகர்யமாய் 
ஜென்ம விலாசமாய் 
சக்தியாய் 
சிவமாய் 
நற்றுணையாகும் 
நமச்சிவாயமாய் 
காட்சி தரும் காலதேவன் 
காலடியில் சரண்புகுந்து 
மோட்சம் பெறும் 
மானுடம் கடந்த 
பேரின்பமே....! 


 கடந்த பேரின்பமே....! 

ஓர் துளியில் 
உயிர் கொண்டு 
உருவான தேகமதைச் 
சிற்றின்பம் சிறைப்பிடித்து 
பாபங்கள் தாபங்கள் 
நித்தம் நித்தம் 
புடைசூழ 
உணர்ச்சிக் குப்பலாய் 
வாய்த்த இவ்வாழ்வில் 
யாதொன்றும் அறியாமல் 
தீதென்றும் தெரியாமல் 
காரிருள் காட்டும் வழி 
காலங்கள் கரைந்தோட 
உயிர்க்கூட்டை 
உடைத்தெறிந்து 
ஆவியாய் ஆனபின் 
பிரபஞ்ச இருளின் 
ஞான ஒளியாய் 
ஆதி அந்தமாய் 
மரண சௌகர்யமாய் 
ஜென்ம விலாசமாய் 
சக்தியாய் 
சிவமாய் 
நற்றுணையாகும் 
நமச்சிவாயமாய் 
காட்சி தரும் காலதேவன் 
காலடியில் சரண்புகுந்து 
மோட்சம் பெறும் 
மானுடம் கடந்த 
பேரின்பமே....! 


 

No comments:

Post a Comment