Saturday 20 August 2011


தனிமொழி தழைக்காது!


முள்ளில்லாத ரோஜாவே!
நான் முன் பார்க்காத முகமே!
மெல்லிய மலரே!
அழகின் தெள்ளிய முகவரியே!
உன் இதழ் சருகியது சங்கீதம்
ஊர் விழிகளில் நீ மீதம்!
உன்னழகை உரைக்கும்வகை
ஒற்றை வாக்கு ஒன்றில்லை
முன்னழகை வர்ணிக்க
மொழியொன்று போதவில்லை!
அவசரத்தில்கூட உன்னை
அழகென்றே சொல்ல இயலும்!
ஆலோசித்தால் கொஞ்சம்
மொழி எல்லாம் தலைகுனியும்!
பூவென்றும் மானென்றும்
நிலவென்றும் சொல்ல
நீ அவை மட்டும் அல்ல!
தேன் என நினைத்தேன்
தமிழில் உன்னை நனைத்தேன்!
அழகில் நனைந்தேன்
ஆராதித்தேன்!
இனி தேன்கூட இனிக்காது!
தமிழ்மொழி மிகைக்காது!
என் 'தமிழே'! உன்னை விட்டு
இந்த 'தனிமொழி' தழைக்காது!

No comments:

Post a Comment